21st Century Learning

Why We Do It?

எண்ணிப் பார்க்க முடியாத சவால்களை எதிர்கொண்ட பின்னரும் நாங்கள் ஏன் செய்கிறோம், என்ன செய்கிறோம் என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.
நாங்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறோம்; விரும்பத்தகாத சூழ்நிலைகள்; ஏன்! சில வேளைகளில் செய்கின்றவை பொருளற்றதாகிப் போன நிலையினையும் எதிர்கொண்டுள்ளோம்.
ஆனால், எங்கள் குழந்தைகளுக்கு இது தேவை என நாங்கள் எங்களிடமே சொல்லிக் கொள்கின்றோம்.
உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு கட்டமைப்பிலிருந்து வெளியேற அவர்களுக்கு ஒரு தளம் தேவை. அவர்கள் சிந்தனையாளர்களாக உருமாற வேண்டும். அவர்கள் வெளியே வந்து உலகைப் பார்க்க வேண்டும். இந்த உலகம் நம் குழந்தைகளுக்கு வழங்குவதற்கு ஏராளமானவற்றை வைத்திருக்கிறது.
எங்களை நாங்களே உந்தித் தள்ளிக் கொண்டே இருப்போம். எங்கள் குழந்தைகளின் கனவை நனவாக்க எந்த எல்லை வரையும் செல்வோம்.
இங்கிருக்கும் குழந்தைகள் அனைவருக்கும், உங்கள் கனவுதான் எங்கள் பணி. உயர்ந்த இலக்கை நோக்கி பயணிப்பதை எந்நிலையிலும் நிறுத்த வேண்டாம்.
பெற்றோர்கள் அனைவருக்கும், உங்கள் குழந்தைகள் எங்களின் குழந்தைகள், ஒன்றாக நிற்போம், நாங்கள் நம் குழந்தைகளுக்குச் சிறந்தவற்றை உருவாக்குவோம். ஒன்றாய் இருப்பதுதான் வலுவானது.
 
இல்ஹாம் கல்விக் கழகம், கல்வி ஓர் அடிப்படை மனித உரிமை என்பதை நம்புகிறது. அந்த நம்பிக்கையை நிலைநாட்ட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
 
எங்களுக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டுகின்றோம். அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றி.

"கல்வி என்பது எதிர்காலத்திற்கான கடப்பிதழ், ஏனென்றால் நாளை என்பது இன்று அதற்குத் தயாராகி வருபவர்களுக்கு சொந்தமானது."
மால்கம் எக்ஸ்

A lot of people ask, why we do, what we do even after facing unthinkable challenges. We have faced many troubles, undesirable circumstances and even to a point where we felt its pointless to do anything. But we told ourselves, our kids need this.  They need a platform to break from the system. They need to become thinkers. They need to come out and see the world. And this world has much to offer to our kids. We will keep pushing ourselves and we will go to any extend to make our kids dream a reality. To all the kids out there, your dream is our work. Don’t stop aiming higher. To all the parents, your kids are our kids, stand together, we will create the best for our kids. Stronger together.
 
Persatuan Pendidikan Ilham believes and advocates education as a basic human rights and we are committed to this cause.
 
We appreciate each and everyone that has supported us. Thank you from bottom of our hearts.

"Education is the passport to the future, for tomorrow belongs to those who prepare for it today."
Malcolm X